Saturday, March 9, 2013

ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான மார்ச் 2013 மாத கூட்டம்

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான, அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு சவூதி அரேபியாவின் மாதாந்திரக் கூட்டம் 08.03.2013 வெள்ளி அன்று, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ரியாத் TNTJ மர்கஸில் பொறுப்பாளர் சகோ. ஹாஜா மைதீன் தலைமையில் நடைபெற்றது.

கல்லூரி வளர்ச்சிக்கான செயல்திட்டங்களையும், கடந்த மாத செயல்பாடுகளையும் பொறுப்பாளர்கள் விளக்கினர். சகோ. ஃபரீத் கணக்கு விபரங்களை கூறினார்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

”ஒற்றுமைக் கோஷமும், ஒன்றுபடும் வழியும்!”- ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தில் 08-03-2013 அன்று இரவு இஷாவிற்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. செய்யதலி ஃபைஸி அவர்கள் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் பயிற்சி பேச்சாளராக சகோ.ஏனங்குடி அலாவுதீன் கலந்து கொண்டு பேசினார்.

அதை தொடர்ந்து சிறப்பு பேச்சாளராக சகோ.ஃபரீத் அவர்கள் ஒற்றுமைக் கோஷமும், ஒன்றுபடும் வழியும் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இறுதியாக மாநில மண்டல செய்திகளை சகோ. ஃபெய்ஸல் கூற கூட்டம் நிறைவுற்றது.

“பின்பற்ற தகுதியானவர் யார்?” – ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

டந்த 08.03.2013 வெள்ளியன்று மதியம் 1 மணியளவில், ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளை ஏற்பாட்டில், ஷிஃபா செனைய்யா பகுதியில் சிறப்பு உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் அவர்கள் பின்பற்றத் தகுதியானவர் யார்? என்ற தலைப்பில் மாமனிதர் நபிகள் நாயகம் குறித்து சிறப்புரையாற்றினார். மண்டல மாநில செயல்பாடுகளை சகோ. ஃபெய்ஸல் விளக்கினார்.

ஷிஃபா கிளை சார்பாக,  1) அநாதைகளை அரவணைப்போம்!, 2) பேச்சின் ஒழுங்குகள் ஆகிய தலைப்புகளில் ஷிஃபா, ஷிஃபா செனைய்யா, உம்முல் ஹமாம் ஆகிய பகுதிகளில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்படுகின்றது.

“முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?” – நியூ செனைய்யா GGCயில் பயான்

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையில் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 05.03.2013 செவ்வாயன்று இரவு GGC வில்லா பள்ளியில் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

அதில் சகோ.ஃபரீத் அவர்கள் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

முன்னதாக பயிற்சிப் பேச்சாளர் சகோ.தாஹீர் அவர்கள் அல்லாஹ் எங்கு இருக்கிறான்? என்னும் தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்.

மண்டல மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ.அரசூர் ஃபாரூக் அவர்கள் கூறினார். கிளை சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் 

“மாமனிதரின் அரசியல், சமூக, ஆன்மீக வாழ்க்கை” – ரியாத் மண்டலத்தின் மூன்றாவது பேச்சுப்போட்டி

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தில் 01-03-2013 அன்று மதியம் அஸருக்குப் பின் உலகம் போற்றும் மாமனிதர் பேச்சுப் போட்டி நடைபெற்றது. மாமனிதரின் சமுதாய வாழ்க்கை, மாமனிதரின் அரசியல் வாழ்க்கை, மாமனிதரின் ஆன்மீக வாழ்க்கை ஆகிய தலைப்புகளின் கீழ் பேச அனுமதிக்கப்பட்டது.

ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மெளலவி. செய்யதலி ஃபைஸி, மெளலவி. உபைதுல்லாஹ், சகோ.முஹம்மது மாஹீன் ஆகியோர் நடுவர்களாக அமர்ந்து நிகழ்ச்சியை நடத்தினர். பங்கு பெற்றவர்களில் முதலிடத்தைப் பெற்ற மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதலாவது இடத்தை பிடித்த சகோ.நெய்னா முஹம்மதுவிற்கு 300 ரியால் மதிப்புள்ள பரிசும் குர்ஆன் தர்ஜூமாவும் வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தை பிடித்த சகோ.நுஸ்கிக்;கு 200 ரியால் மதிப்புள்ள பரிசும் குர்ஆன் தர்ஜூமாவும் வழங்கப்பட்டது.

மூன்றாவது இடத்தை பிடித்த சகோ.தாஹிருக்கு 100 ரியால் மதிப்புள்ள பரிசும் குர்ஆன் தர்ஜூமாவும் வழங்கப்பட்டது.

மேலும் பங்கேற்ற பிற சகோதரர்களுக்கு ஊக்கப் பரிசுகளாக புத்தகங்கள் மற்றும் டிவிடிக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

புதிய பேச்சளர்களை உருவாக்கும் புதியதொரு களமாக இது அமைந்தது. இது ரியாத் மண்டலம் நடத்தும் 3வது பேச்சுப் போட்டியாகும்.


“நேர்வழி எப்படி?” – ஃபெய்ஸாலியா கிளையின் பயான்

ரியாதின் ஃபெய்ஸாலியா கிளைக்கூட்டம் கடந்த 01.03.2013 அன்று ஜீம்ஆவிற்கு பிறகு மண்டலச் செயலாளர் சகோ. அப்துல்ரஹ்மான் நவ்லக் தலைமையிலும், கிளைத் தலைவர் சகோ. கலீல் முன்னிலையிலும் நடைபெற்றது.

மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள் "நேர்வழி எப்படி?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மண்டல செய்திகள் மற்றும் மாநில செய்திகளை சகோ. நவ்லக் எடுத்துக் கூறிய பின் மக்களின் சந்தேகங்களுக்கு பதில் கூறி கூட்டம் நிறைவுற்றது.

“முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?” - ரியாத் – மங்களக்குடி சகோதரர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

ரியாத் மண்டலம் சார்பாக, TNTJ ரியாத் வாழ் மங்களக்குடி சகோதரர்கள் மத்தியில் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 01.03.2013 வெள்ளியன்று மதியம் 1.15 மணிக்கு, ரியாத் மர்கப் பகுதியில் நடைபெற்றது. சகோ. பரீத் "முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மங்களக்குடி சகோதரர்கள் அதிகளவில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.